வெண்ணந்தூர் அருகே தனியார் பஸ் சிறைபிடிப்பு
வெண்ணந்தூரை அடுத்த மடம் பஸ் நிறுத்தத்தில் தனியார் பஸ் நிற்காமல் சென்றதால் பொதுமக்கள் அந்த பஸ்சை சிறைபிடித்தனர்.
வெண்ணந்தூர்:
வெண்ணந்தூரை அடுத்த மடம் பஸ் நிறுத்தத்தில் தனியார் பஸ் நிற்காமல் சென்றதால் பொதுமக்கள் அந்த பஸ்சை சிறைபிடித்தனர்.
பயணி இறக்கி விடப்பட்டார்
ராசிபுரத்தில் இருந்து ஈரோடு செல்லும் தனியார் பஸ் நேற்று முன்தினம் இரவு ஈரோட்டில் இருந்து ராசிபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது வெள்ளை பிள்ளையார் கோவில் பஸ் நிறுத்தத்தில் ஏறிய பயணி ஒருவர், மடம் பஸ் நிறுத்தத்திற்கு டிக்கெட் கேட்டுள்ளார்.
ஆனால் கண்டக்டர், வெள்ளை பிள்ளையார் கோவிலில் இருந்து மடம் செல்லும் சாலையில் நடுவழியிலேயே அந்த பயணியை மடம் பஸ் நிறுத்தத்தில் பஸ் நிற்காது என்று கூறி இறக்கி விட்டார்.
சிறைபிடித்து போராட்டம்
இந்த நிலையில் நேற்று காலை 9.40 மணிக்கு ராசிபுரத்தில் இருந்து ஈரோடு நோக்கி சென்று கொண்டிருந்த அந்த தனியார் பஸ்சை மடம் பஸ் நிறுத்தத்தில் பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் பஸ் நிறுத்தம் இருக்கும் நிலையில் எதற்காக பஸ்சை நிறுத்த மறுக்கிறீர்கள் என்று பொதுமக்களுக்கும், டிரைவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்த வெண்ணந்தூர் போலீ்ஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டம் காரணமாக அந்த பாதையில் சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story