நாமக்கல் மாவட்டத்தில் 137 வகையான பறவை இனங்கள் உள்ளன-வனத்துறை அதிகாரி தகவல்


நாமக்கல்  மாவட்டத்தில் 137 வகையான பறவை இனங்கள் உள்ளன-வனத்துறை அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 16 Feb 2022 12:16 AM IST (Updated: 16 Feb 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மாவட்டத்தில் வெளிநாட்டு பறவைகள் உள்பட 137 வகையான பறவைகள் இருப்பது கணக்கெடுப்பில் தெரியவந்து இருப்பதாக மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம் கூறினார்.

நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் வெளிநாட்டு பறவைகள் உள்பட 137 வகையான பறவைகள் இருப்பது கணக்கெடுப்பில் தெரியவந்து இருப்பதாக மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம் கூறினார்.
பறவைகள் கணக்கெடுப்பு
இந்தியாவில் நீர்நிலை பறவைகள் கணக்கெடுப்பு பணி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, தமிழக அரசின் வனத்துறை சார்பில் மாநிலம் முழுவதும் நீர்நிலை பறவைகள் கணக்கெடுப்பு பணி நடத்தப்பட்டு வருகிறது. 
இந்த நிலையில் நாமக்கல் வனக்கோட்ட கட்டுப்பாட்டில் உள்ள இடங்களில் சேலம் பறவையியல் கழகம் மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் பறவைகள் கணக்கெடுப்பு பணி முதன் முறையாக நடத்தப்பட்டது.
நாமக்கல் மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம் தலைமையில் வனச்சரகர்கள், வனவர்கள் உள்பட வனத்துறையினர் 40 பேரும், பறவையியல் ஆர்வலர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் 33 பேரும் என மொத்தம் 73 பேர் இந்த பணியில் ஈடுபட்டனர்.
137 இனங்கள்
நாமக்கல் வனச்சரக பகுதிகளில் உள்ள தூசூர், பழையபாளையம், சாரப்பள்ளி, வேட்டாம்பாடி, நாச்சிப்புதுார், இடும்பன்குளம், ஜேடர்பாளையம் படுகை அணை, கஸ்தூரிப்பட்டி பகுதிகளிலும், ராசிபுரம் வனச்சரகத்தில், பருத்திப்பள்ளி அமிர்தசாகரம், ஓமையாம்பட்டி, இலுப்புலி, கோனேரிப்பட்டி, புத்தூர், ஓசக்கரையாத்து, ஏ.கே.சமுத்திரம், கண்ணூர்ப்பட்டி, எஸ்.நாட்டாமங்கலம் பகுதிகளிலும், முள்ளுக்குறிச்சி வனச்சரகத்தில் தும்பல்பட்டி பகுதியிலும் இந்த கணக்கெடுப்பு பணி நடைபெற்றது.
2 நாட்கள் நடைபெற்ற இந்த கணக்கெடுப்பின் போது நாமக்கல் வனக்கோட்ட பகுதிகளில் 22 வெளிநாட்டு பறவைகள் உள்பட 137 பறவை இனங்கள் கண்டறியப்பட்டன. மேலும் 33 ஆயிரத்து 845 பறவைகள் நீர்நிலைகளில் உலாவுவது தெரியவந்தது.
22 வெளிநாட்டு பறவைகள்
இது குறித்து நாமக்கல் மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம் கூறியதாவது:-
நாமக்கல் மாவட்டத்தில் 18 ஈர நிலங்கள் மற்றும் நீர்நிலைகளில் 2 நாட்கள் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடந்தது. அதில் 137 வகைகளை சேர்ந்த 33 ஆயிரத்து 800-க்கும் மேற்பட்ட பறவைகள் கண்டறியப்பட்டன.
அதில் மயில், உள்ளான், கருங்குருகு, செந்தலை போன்ற அரிய வகை இனங்கள் உள்பட 110 வகையான உள்ளூர் பறவைகள் மற்றும் வெண்புருவ வாத்து, சாம்பல் வாலாட்டி, மஞ்சள் வாலாட்டி, வெண்தோள் கழுகு உள்பட 5 வகையான வெளிமாநில பறவைகள், கிரீன் சன்ட் பைபர், புளு டெய்டு பீ எஸ்டர், கிங் பிஷர், வுட் சன்ட் பைபர், ரெட் வாட்டல்டு லாப்பிங், இந்தியன் சில்வர் பில் உள்பட 22 வெளிநாட்டு பறவைகளும் கண்டறியப்பட்டு உள்ளன. இதில் 47 நீர்வாழ் பறவைகள் உள்ளிட்ட அரிய வகை பறவைகளும் அடங்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story