திருமணம் செய்வதாக ஏமாற்றிய வாலிபர் கைது


திருமணம் செய்வதாக ஏமாற்றிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 16 Feb 2022 12:56 AM IST (Updated: 16 Feb 2022 12:56 AM IST)
t-max-icont-min-icon

திருமணம் செய்வதாக ஏமாற்றிய வாலிபர் கைது

ஜீயபுரம், பிப்.16-
மண்ணச்சநல்லூர் அருகே உள்ள வெங்கங்குடி கிராமத்தை சேர்ந்தவர் சுகுமார் (வயது 38). இவர் மின்வாரியத்தில் பணியாற்றி வருகிறார். இவர் பொன்மலை பகுதியை சேர்ந்த புவனேஸ்வரி (27) என்பவரிடம் திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி ரூ.2 லட்சம் மற்றும் ½ பவுன் தங்க மோதிரம் வாங்கினாராம். ஆனால் அவர் திருமணம் செய்து கொள்ளவில்லையாம். இது குறித்து புவனேஸ்வரி  ஜீயபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுகுமாரை கைது செய்தனர்.

Next Story