டெல்டாவில் கொரோனாவுக்கு 4 பேர் பலி


டெல்டாவில் கொரோனாவுக்கு 4 பேர் பலி
x
தினத்தந்தி 16 Feb 2022 1:29 AM IST (Updated: 16 Feb 2022 1:29 AM IST)
t-max-icont-min-icon

டெல்டாவில் கொரோனாவுக்கு 4 பேர் பலி

தஞ்சாவூர்:-

டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் நேற்று ஒரே நாளில் 60 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. தஞ்சை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 26 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. திருவாரூர் மாவட்டத்தில் 14 பேருக்கும், நாகை மாவட்டத்தில் 16 பேருக்கும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 4 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. நேற்று டெல்டா மாவட்டங்களில் 251 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இந்த நிலையில் தொற்றால் பாதிக்கப்பட்டு நாகை, தஞ்சை மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்த தலா ஒருவரும், திருவாரூரில் சிகிச்சை பெற்று வந்த 2 பேரும் என டெல்டாவில் நேற்று 4 பேர் பலியானார்கள். தற்போது தஞ்சை மாவட்டத்தில் 784 பேரும், திருவாரூர் மாவட்டத்தில் 568 பேரும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 283 பேரும், நாகை மாவட்டத்தில் 79 பேரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Next Story