காரில் ரூ.2.17 லட்சம் பறிமுதல்
மேலச்செவலில் காரில் ரூ.2.17 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
சேரன்மாதேவி:
நெல்லை மாவட்டம் மேலச்செவல் வாணியான்குளம் பகுதியில் தேர்தல் பறக்கும்படை அதிகாரி பேச்சியம்மாள் தலைமையிலான அதிகாரிகள் நேற்று மாலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகிக்கும்படியாக நின்று கொண்டிருந்த காரை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
காரில் உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூ.2,17,500-ஐ அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதனை மேலச்செவல் தேர்தல் நடத்தும் அலுவலர் லோபாமுத்திரை, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சுப்பையா ஆகியோர் முன்னிலையில் சேரன்மாதேவி கருவூல அலுவலக அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், காரில் இருந்தவர் மதுரையை சேர்ந்த இளங்கோவன் மகன் ஜெகதீஸ் என்பது தெரிய வந்தது. உரிய ஆவணங்களை சமர்பித்து பணத்தை பெற்றுக்கொள்ளும்படி அவரிடம் அதிகாரிகள் அறிவுறுத்தி அனுப்பினர்.
Related Tags :
Next Story