வாக்குச்சாவடியில் பயன்படுத்தப்படும் பொருட்கள் தயார்
சிவகாசி மாநகராட்சி தேர்தலுக்கு வாக்குச்சாவடியில் பயன்படுத்தப்படும் பொருட்கள் தயார் நிலையில் உள்ளது.
சிவகாசி,
சிவகாசி மாநகராட்சிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு பிரசாரங்கள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வாக்குபதிவு தினத்தன்று வாக்குச்சாவடியில் பயன்படுத்தப்படும் பொருட்களை பார்சல் பண்ணும் பணி மாநகராட்சி அலுவலகத்தில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வாக்குபதிவின் போது பயன்படுத்தப்படும் பொருட்களை உள்ளுர் கடைகளில் மொத்தமாக வாங்கி மாநகராட்சி அலுவலகத்தில் பிரித்து பின்னர் வருகிற 18-ந்தேதி வாக்கு எந்திரங்களுடன் அனுப்பி வைக்க தேவையான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகிறது. வாக்குச்சாவடியில் பயன்படுத்தப்பட உள்ள பொருட்களை ஒரு பையில் போட்டு வைத்துள்ளனர். சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 111 வாக்கு மையங்கள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story