கியாஸ் சிலிண்டர் குடோன் கட்ட எதிர்ப்பு தெரிவித்து கிராமமக்கள் சாலை மறியல்


கியாஸ் சிலிண்டர் குடோன் கட்ட எதிர்ப்பு தெரிவித்து கிராமமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 16 Feb 2022 2:08 AM IST (Updated: 16 Feb 2022 2:08 AM IST)
t-max-icont-min-icon

கியாஸ் சிலிண்டர் குடோன் கட்ட எதிர்ப்பு தெரிவித்து கிராமமக்கள் சாலை மறியல்

திருமங்கலம்
திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது வடகரை பஞ்சாயத்து. இந்தப் பஞ்சாயத்திற்கு உட்பட்ட சுங்குராம்பட்டி கிராமத்தில் தனியார் நிறுவனத்திற்கு ெசாந்தமாக கியாஸ் குடோன் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. பொதுமக்களிடம் எந்த கருத்து கேட்காமலும், விதிமுறைகளை மீறி பஞ்சாயத்து நிர்வாகம் கட்டிடம் கட்ட அனுமதி வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இங்கு கியாஸ் சிலிண்டர் குடோன் அமைந்தால் கிராம மக்களுக்கு பாதிப்பு ஏற்படும். 
இதற்கு அரசு அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளனர். அத்துடன் சுங்குராம்பட்டி கிராமத்தில் இருந்து சுடுகாட்டிற்கு இறந்தவர்களை கொண்டு செல்லும் வழியில் வெடி போடும்போது குடோன்மீது பட்டு விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. அத்துடன் அருகில் பள்ளி மற்றும் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. 
இதனால் கியாஸ் சிலிண்டர் குடோன் கட்டும் பணியை உடனே கைவிட வேண்டும் எனக் கோரி சுங்குராம்பட்டி கிராம மக்கள் விடத்தகுளம் திருமங்கலம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது கியாஸ் குடோன் கட்டும் பணியை நிறுத்த வேண்டும் என கோஷமிட்டனர். 
இதுகுறித்து தகவல் அறிந்த திருமங்கலம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சாலைமறியல் கைவிடப்பட்டது. இந்த மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story