ஞானப்புகழ்ச்சி பாடுதல் நிகழ்ச்சி விடிய விடிய நடந்தது


ஞானப்புகழ்ச்சி பாடுதல் நிகழ்ச்சி விடிய விடிய நடந்தது
x
தினத்தந்தி 16 Feb 2022 2:21 AM IST (Updated: 16 Feb 2022 2:21 AM IST)
t-max-icont-min-icon

தக்கலை ஞானமாமேதை பீர்முகமது ஒலியுல்லா ஆண்டுவிழாவையொட்டி ஞான புகழ்ச்சி பாடுதல் நிகழ்ச்சி விடிய, விடிய நடந்தது.

அழகியமண்டபம்:
தக்கலை ஞானமாமேதை பீர்முகமது ஒலியுல்லா ஆண்டுவிழாவையொட்டி ஞான புகழ்ச்சி பாடுதல் நிகழ்ச்சி விடிய, விடிய நடந்தது.
ஆண்டு விழா
தக்கலை ஞானமாமேதை பீர்முகமது ஒலியுல்லா 18 ஆயிரம் ஞானப்புகழ்ச்சி பாடல்களை எழுதியுள்ளார். இவரது ஆண்டு விழா தக்கலையில் ஒவ்வொரு ஆண்டும் தக்கலை அஞ்சுவன்னம் பீர்முகமது முஸ்லிம் அசோசியேஷன் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. 
இந்த ஆண்டு விழா கடந்த 2-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பீர்முகமது ஒலியுல்லா எழுதிய ஞானப்புகழ்ச்சி பாடுதல் நேற்று இரவு 9 மணி முதல் காலை வரை விடிய, விடிய நடந்தது. 
ஞானப்புகழ்ச்சி பாடல்
இந்த நிகழ்ச்சியின்போது ஞானப்புகழ்ச்சியில் உள்ள பாடல்களை இசை வடிவில் கூட்டாக பாடினர்.
 இதில் தமிழகம் மற்றும் கேரளாவில் உள்ள பல மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு இன்று (புதன்கிழமை) குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அஞ்சுவன்னம் பீர்முகமது அசோசியேஷன் தலைவர் அப்துல் ஜாபர், துணைத்தலைவர் முகமது சலீம், செயலாளர் ஹமீம் முஸ்தபா, பொருளாளர் ரபிக் மற்றும் நிர்வாக உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள் இணைந்து செய்திருந்தனர்.

Next Story