நகர்ப்புற உள்ளாட்சிதேர்தலையொட்டி 4 நாட்கள் மதுக்கடைகள் மூடல்


நகர்ப்புற உள்ளாட்சிதேர்தலையொட்டி 4 நாட்கள் மதுக்கடைகள் மூடல்
x
தினத்தந்தி 16 Feb 2022 2:28 AM IST (Updated: 16 Feb 2022 2:28 AM IST)
t-max-icont-min-icon

நகர்ப்புற உள்ளாட்சிதேர்தலையொட்டி 4 நாட்கள் மதுக்கடைகள் மூடப்படுகிறது

நாகர்கோவில்:
நகர்ப்புற உள்ளாட்சிதேர்தலையொட்டி 4 நாட்கள் மதுக்கடைகள் மூடப்படுகிறது.
இதுபற்றி குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
குமரி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகள் மற்றும் அதனை சுற்றி 5 கிலோ மீட்டர் வரையுள்ள அனைத்து டாஸ்மாக் சில்லறை மதுக்கடைகள் மற்றும் உணவு விடுதியுடன் கூடிய மதுபான கூடங்கள் ஆகியவை நாளை (வியாழக்கிழமை) முதல் 19-ந் தேதி(சனிக்கிழமை) வரை 3 நாட்கள் மூடப்படும்.  
இதேபோல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பகுதி மற்றும் அதை சுற்றி 5 கிலோ மீட்டர் வரையுள்ள 73 டாஸ்டாக் கடைகள், உணவு விடுதியுடன் கூடிய 34 மதுபானக்கூடங்களும் வருகிற 22-ந் தேதி செயல்படாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story