மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் 2 பேர் பலி
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் 2 பேர் இறந்தனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் ஆத்தூர் சாலையில் எசனை அருகே நாற்காரன்கொட்டகையில் நேற்று இரவு லாரியும்-மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டன. இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற குன்னம் தாலுகா மங்கலம் வடக்கு தெருவை சேர்ந்த சிவராமன் மகன் ஆனந்தராஜ் (வயது 21) உள்பட 2 பேர் படுகாயமடைந்து, சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஆனந்தராஜ் உள்பட 2 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story