சிறுமியை திருமணம் செய்து தாயாக்கியவர் போக்சோவில் கைது
சிறுமியை திருமணம் செய்து தாயாக்கியவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் தேவாமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் இளவரசன். இவர் ஒரு சிறுமியை காதலித்துள்ளார். இதையடுத்து சிறுமியின் பெற்றோர் திருமணத்திற்கு சம்மதிக்காததால் அவர்களின் அனுமதியின்றி இளவரசனின் பெற்றோர் இருவருக்கும் கடந்த 2020-ம் ஆண்டு ஜூலை மாதம் திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்நிலையில் கர்ப்பமான சிறுமி பிரசவத்திற்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அப்போது குழந்தையின் பிறப்புச் சான்றிதழுக்காக தந்தை, தாய் பெயரை பதிவு செய்தபோது குழந்தையின் தாய்க்கு 16 வயதே ஆவது தெரியவந்தது. இதையடுத்து மருத்துவமனை டாக்டர்கள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறை அலுவலர் ஜெயகாந்திக்கு தகவல் தெரிவித்தனர். சிறுமியிடம் விசாரணை நடத்திய ஜெயகாந்தி, இதுகுறித்து ஜெயங்கொண்டம் மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சுமதி, போக்சோ சட்டத்தில் இளவரசனை கைது செய்தார். மேலும் குழந்தைத் திருமணத்திற்கு உடந்தையாக இருந்த இளவரசனின் பெற்றோரான சின்னத்தம்பி, செல்வம்பாள் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story