வாகன சோதனையில் ரூ.1 லட்சம் பறிமுதல்


வாகன சோதனையில் ரூ.1 லட்சம் பறிமுதல்
x
தினத்தந்தி 16 Feb 2022 2:50 AM IST (Updated: 16 Feb 2022 2:50 AM IST)
t-max-icont-min-icon

வாகன சோதனையில் ரூ.1 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

அரியலூர்:

வாகன சோதனை
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் வழங்கப்படுவதை தடுக்க அரியலூரில் நகர் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் வாகனங்களை நிறுத்தி அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஒன்றிய அலுவலகம் அருகில் ஒன்றிய உதவி ஆணையர் கணேசன் மற்றும் போலீசார் தீபன், அந்தோணிராஜ் ஆகியோர் கொண்ட பறக்கும் படையினர் வாகன சோதனை நடத்தினர்.
அப்போது அந்த வழியாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி, அதனை ஓட்டி வந்தவர் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அப்போது அதில் ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்து 500 இருந்தது.
பணம் பறிமுதல்
இது குறித்து அவரிடம் விசாரித்தபோது, அவர் கோக்குடி கீழத்தெருவை சேர்ந்த சவுரிராஜன் என்பது தெரியவந்தது. மேலும் எல்.ஐ.சி. ஏஜெண்டாக பணிபுரிந்து வரும் அவர், வாடிக்கையாளரிடம் மாத பிரீமிய தொகையை வசூல் செய்து அலுவலத்தில் கட்ட வந்ததாக, கூறினார். ஆனால் அதற்கு உரிய ஆவணங்கள் இல்லை என்று அந்த பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர், அதனை மாவட்ட கருவூலத்தில் செலுத்தினர்.

Next Story