கொடுமுடியில் பரிதாபம்: தந்தை திட்டியதால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
கொடுமுடியில் தந்தை திட்டியதால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
கொடுமுடி
கொடுமுடியில் தந்தை திட்டியதால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
ரியல் எஸ்டேட் அதிபர்
ஈரோடு பொியார் நகரை சேர்ந்தவர் பாபுதாஸ்தாகீர். ரியல் எஸ்டேட் அதிபர். இவருடைய மனைவி ஷகிலா பானு. மகன் கியாசுதீன் (வயது 22). பிளஸ்-2 முடித்து விட்டு வெளிநாட்டு வேலைக்காக முயற்சி செய்துகொண்டு இருந்தார்.
பாபுதாஸ்தாகீரின் மருமகன் உடல்நிலை பாதிக்கப்பட்டு ஈரோட்டில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். அவரை பார்ப்பதற்காக பாபுதாஸ்தாகீரும், ஷகீலா பானுவும் நேற்று முன்தினம் சென்றார்கள். பின்னர் மாலை வீடு திரும்பினார்கள். அப்போது வீடு பூட்டப்பட்டு இருந்தது. இதனால் மகன் கியாசுதீனை செல்போனில் தொடர்பு கொண்டார்கள். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை.
கதவை திறக்கவில்லை
இந்தநிலையில் இரவு 9 மணி அளவில் கியாசுதீனும், கொடுமுடியில் வசிக்கும் அவருடைய மாமா பாபுவும் வீட்டுக்கு வந்தார்கள். அப்போது பாபுதாஸ்தாகீர் ஏன் போனை எடுக்கவில்லை என்று மகனை திட்டியுள்ளார். அதன்பின்னர் வீட்டை திறந்து உள்ளே சென்றுவிட்டார்கள். அப்போது மகனை பாபுதாஸ்தாகீர் சாப்பிட அழைத்தபோது தான் மாமாவுடன் சாப்பிட்டு விட்டதாக கூறி தன்னுடைய அறைக்கு தூங்க சென்றுவிட்டார். இதையடுத்து நேற்று காலை 9 மணி ஆகியும் கியாசுதீன் அறைக்கதவை திறக்கவில்லை. பாபுதாஸ்தாகீரும், ஷகீலாபானுவும் கதவை தட்டியும் எந்த பதிலும் வரவில்லை.
தூக்கில் தொங்கினார்
இதனால் அதிர்ச்சி அடைந்து கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தார்கள். அப்போது ஜன்னல் கம்பியில் தாயின் சேலையால் தூக்குப்போட்டு கியாசுதீன் தற்கொலை செய்துகொண்டது தெரிந்தது. மகனின் உடலை பார்த்து இருவரும் கதறி துடித்தார்கள். இதுகுறித்து உடனே கொடுமுடி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் கொடுமுடி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கொடுமுடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்கள். இதுகுறித்து கொடுமுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story