கவுந்தப்பாடி அருகே பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டம்


கவுந்தப்பாடி அருகே பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டம்
x
தினத்தந்தி 16 Feb 2022 3:15 AM IST (Updated: 16 Feb 2022 3:15 AM IST)
t-max-icont-min-icon

கவுந்தப்பாடி அருகே பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கவுந்தப்பாடி
கவுந்தப்பாடி அருகே பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். 
வாசக சாலைக்கு சொந்தமான இடம்
கவுந்தப்பாடி அருகே உள்ள கிருஷ்ணாபுரம் காலனி பகுதியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு இங்குள்ளவர்களுக்கு அரசின் சார்பில் வீட்டுமனை வழங்கப்பட்டது.  அப்போது ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் கோபி - ஈரோடு சாலையில் சுமார் 8 சென்ட் நிலம் அம்பேத்கர் வாசக சாலைக்கு என வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அந்த இடத்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த ஒருவர் வேறு ஒரு நபருக்கு விற்பனை செய்ததாக தெரிகிறது. இதனால் அந்த இடத்தை மீட்டு அம்பேத்கர் வாசக சாலைக்கு வழங்க வலியுறுத்தி கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தை அறிவித்து இருந்தனர்.
உண்ணாவிரத போராட்டம்
இந்த நிலையில் இதுவரை நிலத்தை மீட்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி கிராம மக்கள் கிருஷ்ணாபுரத்தில் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 இதுபற்றி அறிந்ததும் பவானி தாசில்தார் முத்துகிருஷ்ணன், கவுந்தப்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபாஸ் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். 
பரபரப்பு
அப்போது அதிகாரிகள் கூறுகையில், ‘வருகிற 4-ந் தேதிக்குள் இடப்பிரச்சினை சம்பந்தமாக நடைபெறும் விசாரணையில் கோபி ஆர்.டி.ஓ. முன்பு இரு தரப்பினரும் தங்களுடைய ஆவணங்களை ஒப்படைத்து அதன் மூலம் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்றனர். 
இதைத்தொடர்ந்து பொதுமக்கள் தங்களுடைய உண்ணாவிரத போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story