ரூ.8½ லட்சம் பட்டு சேலைகள் பறிமுதல்
சங்ககிரியில் உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.8½ லட்சம் பட்டு சேலைகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
சங்ககிரி:-
சங்ககிரியில் உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.8½ லட்சம் பட்டு சேலைகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி உரிய ஆவணமின்றி ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் மற்றும் பொருட்கள் கொண்டு சென்றால் அதனை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் சேலம் மாவட்டம் சங்ககிரி தனி தாசில்தார் சாந்தனி தலைமையில் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் நேற்று முன்தினம் இரவு 11.45 மணியளவில் சங்ககிரி சுங்கச்சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
பட்டு சேலைகள் பறிமுதல்
அப்போது சேலத்தில் இருந்து சங்ககிரி நோக்கி வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை நடத்தினர். அதில் 48 அட்டை பெட்டிகளில் 1,416 பட்டு சேலைகள் இருந்தன. இது குறித்து சரக்கு வாகனத்தின் டிரைவர் சேலம் மணியனூரை சேர்ந்த சக்திவேல் (வயது 40) என்பவரிடம் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில், சேலைகளை வாஷிங் செய்வதற்காக சேலத்தில் இருந்து ஈரோட்டிற்கு எடுத்து செல்வதாக சக்திவேல் தெரிவித்துள்ளார். ஆனால் அதற்கு உரிய ஆவணங்கள் எதுவும் இல்லை.
இதைத்தொடர்ந்து ரூ.8 லட்சத்து 53 ஆயிரத்து 335 மதிப்புள்ள பட்டு சேலைகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் அதனை சங்ககிரி பேரூராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் சுலைமான்ேசட்டிடம் வழங்கினார்கள். தொடர்ந்து அவை சங்ககிரி கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
Related Tags :
Next Story