சாலையோரத்தில் காத்திருக்கும் மாணவ-மாணவிகள்
குறிப்பிட்ட நேரத்தில் பள்ளி திறக்கப்படாததால் சாலையோரத்தில் மாணவ-மாணவிகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தேவதானப்பட்டி:
கெங்குவார்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 250 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். பெற்றோர்கள் குறித்த நேரத்தில் மாணவர்களை பள்ளிக்கு கொண்டு வந்து விட்டு செல்கின்றனர். சில மாணவர்கள், பெற்றோர்கள் இல்லாமல் தானாகவே பள்ளிக்கு வருகின்றனர். ஆனால் பள்ளி குறிப்பிட்ட நேரத்தில் திறக்கப்படவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.
வெளிப்புற கேட் பூட்டியே கிடக்கிறது.இதனால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் வெளியே காத்திருக்கும் சூழ்நிலை உள்ளது. மேலும் பெற்றோர்கள் இல்லாமல் வரும் மாணவ-மாணவிகள் மெயின் ரோட்டுக்கு வந்து விளையாடுகின்றனர். இதனால் சாலையில் செல்லும் வாகனங்களால் விபத்து ஏற்படும் சூழல் நிலவுகிறது.
எனவே மாணவ-மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு குறிப்பிட்ட நேரத்தில் பள்ளியை திறக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
Related Tags :
Next Story