தினத்தந்தி புகார் பெட்டி மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டி பகுதிக்கு 99628 18888 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு வந்த மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் விவரம் வருமாறு:-
தினத்தந்தி புகார் பெட்டி பகுதிக்கு 99628 18888 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு வந்த மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் விவரம் வருமாறு:-
வீணாகும் குடிநீர்
கோத்தகிரி டானிங்டன் எம்.ஜி.ஆர் சதுக்கம் பகுதியில் குடியிருப்புகளுக்கு குடிநீர் வினியோகம் செய்ய அமைக்கப்பட்ட பிரதான குழாய் உடைந்தது. இதனால் தண்ணீர் வீணாக சாலையில் சென்று கொண்டு இருக்கிறது. இதன் காரணமாக அந்தப்பகுதியில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு உள்ளது. அத்துடன் சாலையில் தண்ணீர் தேங்கி நிற்பதால் அந்த வழியாக வாகனங்களில் செல்பவர் கள் அவதியடைந்து வருகிறார்கள். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குழாய் உடைப்பை சரிசெய்ய வேண்டும்.
காளிதாஸ், கோத்தகிரி.
தினத்தந்தி செய்தி எதிரொலி:
குவிந்து கிடந்த குப்பைகள் அகற்றம்
கோத்தகிரி கருவூலம் அருகே காவலர் குடியிருப்புக்கு செல்லும் சாலையோரம் ஏராளமான குப்பைகள் கொட்டப்பட்டு, குவிந்து கிடந்தது. அந்த குப்பைகள் அகற்றப்படாததால் அதிகளவில் துர்நாற்றம் வீசியது. இது குறித்து தினத்தந்தி புகார் பெட்டி பகுதியில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. அதன்பயனாக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குவிந்து கிடந்த குப்பைகளை அகற்றினார்கள். எனவே செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி.
சுப்பிரமணி, கோத்தகிரி.
கட்டிட கழிவுகள்
கோத்தகிரி டானிங்டன் பகுதியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் பிரதான சாலையோரம் நீரோடை உள்ளது. இங்கு சிலர் இரவில் கட்டிட கழிவுகளை கொட்டிவிட்டு செல்கிறார்கள். இதனால் ீநீரோடையில் நீரோட்டம் மாறுபடுவதுடன், தண்ணீர் தேங்கி வேறு இடங்களுக்கு செல்ல வாய்ப்பு உள்ளது. எனவே அதிகாரிகள் நடவடிக்ைக எடுத்து அங்கு கொட்டப்படும் கட்டிட கழிவுகளை அப்புறப்படுத்துவதுடன், இதுபோன்று கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அர்ஜூனன், கோத்தகிரி.
அதிவேகமாக செல்லும் பஸ்கள்
பொள்ளாச்சி பழைய பஸ் நிலையத்தில் இருந்து கோவைக்கு ஏராளமான பஸ்கள் இயக்கப்படுகிறது. இதில் பல பஸ்கள் ஒன்றுடன் ஒன்று போட்டிப்போட்டு அதிவேகமாக இயக்கப்படுகிறது. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. அத்துடன் இந்த பஸ்களில் செல்லும் பயணிகளும் அச்சத்துடன் பயணிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே அதிவேகமாக பஸ்களை ஓட்டிச்செல்லும் டிரைவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாராயணன், பொள்ளாச்சி.
குப்பை தொட்டி இ்ல்லை
கோவை சாய்பாபாகாலனி காமராஜர் வீதியில் சாைலயோரத்தில் ஏராளமான குப்பைகள் கொட்டப்பட்டு உள்ளது. அந்த குப்பைகள் சுத்தம் செய்யப்படாததால் அவை குவிந்து காணப்படுகிறது. இதன் காரணமாக காற்று வீசும்போது குப்பைகள் பறந்து அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மீது விழுகிறது. மேலும் அதிகளவில் துர்நாற்றம் வீசுவதால் தொற்றுநோய் பரவும் அபாயமும் நிலவுகிறது. எனவே அதிகாரிகள் அந்தகுப்பைகளை சுத்தம் செய்வதுடன் குப்பைகளை போட குப்பை தொட்டி வைக்க வேண்டும்.
சந்துரு, சாய்பாபாகாலனி.
புதர்மண்டி கிடக்கும் பூங்கா
ேகாவை சாய்பாபாகாலனி கே.கே.புதூர் மணியம்காளியப்பா வீதியில் மாநகராட்சி பூங்கா உள்ளது. இந்த பூங்கா போதிய அளவில் பராமரிப்பு செய்யப்படாததால் புதர்மண்டி கிடக்கிறது. இதனால் பூங்காவை யாரும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. அத்துடன் அங்கு விஷப்பூச்சிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளதால், அவை குடியிருப்பு பகுதிக்குள் புகும் அபாயம் நிலவுகிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்ைக எடுத்து பூங்காவை சுத்தம் செய்ய வேண்டும்.
சவுதமன், கே.கே.புதூர்.
குண்டும் குழியுமான சாலை
கோவை வெங்கடாபுரத்தில் இருந்து இடையர்பாளையம் செல்லும் சாலை குண்டும் குழியுமாக மிகவும் பழுதான நிலையில் இருக்கிறது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். அத்துடன் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் விபத்தில் சிக்கி காயத்துடன் உயிர் தப்பி செல்லும் நிலை நீடித்து வருகிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இந்த சாலையை சரிசெய்ய வேண்டும்.
ஜெயபிரசாத், கோவில்மேடு.
குவிந்து கிடக்கும் குப்பைகள்
வேடபட்டி பேரூராட்சி 8-வது வார்டுக்கு உட்பட்ட காரமடை பகுதியில் குப்பைகள் சுத்தம் செய்யப்படுவது இல்லை. இதனால் அங்கு குப்பைகள் குவிந்து கிடப்பதால் அங்கு கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் அந்த வழியாக செல்பவர்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற வேண்டும்.
அழகேசன், காரமடை.
வேகத்தடை வேண்டும்
கோவை அருகே உள்ள பாப்பம்பட்டி பிரிவை அடுத்த பாரதிபுரம் பகுதியில் வாகனங்கள் அதிவேகத்தில் செல்கின்றன. இதனால் அங்கு தினமும் விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக இந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே இங்கு விபத்துகள் நடப்பதை தடுக்க உடனடியாக வேகத்தடை அமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.
ரஜினி செந்தில், பாப்பம்பட்டி.
தெருநாய்கள் ெதால்லை
ேகாைவ ராமநாதபுரம் 80 அடி சாலையில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக காணப்படுகிறது. கூட்டங்கூட்டமாக சாலையில் உலா வரும் இந்த நாய்கள், அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்பவர் களை துரத்தி துரத்தி கடிக்கிறது. இதனால் அடிக்கடி விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தெருநாய்கள் தொந்தரவை கட்டுப்படுத்த வழிவகை செய்ய வேண்டும்
குமரேசன், ராமநாதபுரம்.
Related Tags :
Next Story