‘தினத்தந்தி’ புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
நாய்கள் தொல்லை
திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியம் பெருகவாழ்ந்தான் பகுதியில் நாய்கள் அதிகளவில் சுற்றித் திரிகின்றன. இவை அந்த பகுதியில் வீடுகளில் வளர்க்கப்படும் ஆடு, கோழிகளை கடித்து தின்று விடுகின்றன. அதுமட்டுமின்றி சாலையில் நடந்து செல்லும் பெண்கள்,குழந்தைகளை நாய்கள் விரட்டி செல்கின்றன. இதன் காரணமாக பொதுமக்கள் சாலையில் அச்சத்துடன் நடந்து சென்று வருகின்றனர். மேலும் கூட்டமாக சுற்றி திரியும் நாய்கள் வாகனங்களில் செல்பவர்களையும் விரட்டி செல்கின்றன. இதனால் அந்த பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சுற்றித் திரியும் நாய்களை பிடித்துச் செல்ல நடவடிக்கை எடுப்பார்களா?
-செந்தில்குமார், பெருகவாழ்ந்தான்.
வேகத்தடை வேண்டும்
நாகை மாவட்டத்தில் தலைமை ஆஸ்பத்திரி உள்ளது. இந்த ஆஸ்பத்திரியின் எதிரில் உள்ள சாலையில் எப்போதும் வாகனங்கள் சென்று வந்த வண்ணம் இருக்கும். மேலும் அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ-மாணவிகள் தினமும் இந்த வழியாக ஏராளமானோர் சென்று வருகின்றனர். இந்த சாலையில் தற்போது வேகத்தடை இல்லை. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் வேகமாக சென்று வருகின்றன. இதனால் சிறு, சிறு விபத்துக்களும் ஏற்பட்ட வண்ணம் உள்ளன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கப்பார்களா? என்று பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
-முத்தையன், நாகை
Related Tags :
Next Story