மாடுபிடி வீரர் உள்பட 2 பேர் பலி
மாடுபிடி வீரர் உள்பட 2 பேர் பலியாகினர்.
சிங்கம்புணரி,
சிங்கம்புணரி அருகே அரளிப்பாறையில் நடைபெற்ற மஞ்சு விரட்டை சுற்று கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் கண்டு ரசித்துவிட்டு ஊர் திரும்பினர். தெக்கூர்விலக்கு எம். கோவில்பட்டியை சேர்ந்த மாடுபிடி வீரர் பெரியசாமி (வயது27) என்பவரும் மஞ்சுவிரட்டில் பங்கேற்று தனது மோட்டார் சைக்கிளில் ஊருக்கு சென்றுகொண்டு இருந்தார். அப்போது முறையூர் கிராமத்தை சேர்ந்த ஏடகம் ஸ்தபதி அறிவுகரசு (58) என்பவர் ஓட்டி வந்தார். எதிர்பாராதவிதமாக 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்குநேர் மோதின. இதில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர். இதில் அறிவுக்கரசு சம்பவ இடத் திலேயே உயிரிழந்தார். பெரியசாமி சிங்கம்புணரி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து எஸ்.வி.மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story