குமாரபாளையத்தில் போலி வக்கீல் கைது 6-ம் வகுப்பு வரை படித்து விட்டு ஏமாற்றியது அம்பலம்
குமாரபாளையத்தில் போலி வக்கீல் கைது செய்யப்பட்டார்.
குமாரபாளையம்:
குமாரபாளையத்தில் போலி வக்கீல் கைது செய்யப்பட்டார்.
மாற்றுத்திறனாளி
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள சாணார்பாளையத்தை சேர்ந்தவர் சிவப்பிரகாசம். இவருடைய மகன் மாரிமுத்து என்கிற மோகன கண்ணன் (வயது 40) இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. மாற்றுத்திறனாளியான இவர் தற்போது திருச்செங்கோடு அருகே உள்ள கூட்டபள்ளியில் வசித்து வருகிறார்.
கடந்த 13 ஆண்டுகளாக மோகன கண்ணன் தான் ஒரு வக்கீல் என்று கூறி நம்ப வைத்து, குமாரபாளையம் கோர்ட்டுக்கு சென்று வந்ததுடன், பலரிடம் பணம் வசூலித்து வந்தாராம். இந்த நிலையில் இவருடைய நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த சக வக்கீல்கள் குமாரபாளையம் பார் அசோசியேஷன் மூலம் குமாரபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
கைது
அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார் கோர்ட்டு வளாகத்திற்குள் சென்று அவரிடம் விசாரித்தனர். அதில் அவர் தனது வழக்கறிஞர் சான்றிதழ் சென்னையில் உள்ளது என்றும், பதிவெண் தெரியவில்லை என்றும் முதலில் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் துருவி துருவி விசாரித்ததில், மோகன கண்ணன் ஒரு பதிவெண்ணை கொடுத்தார். ஆனால் அது வேறு ஒரு வக்கீலுடையது என்பது தெரியவந்தது.
மேலும் மோகன கண்ணன் 6-ம் வகுப்பு வரை மட்டுமே படித்து விட்டு கடந்த 13 ஆண்டுகளாக வக்கீல் என்று கூறி மோசடி செய்த போலி வக்கீல் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் நேற்று இரவு குமாரபாளையம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி 15 நாள் காவலில் வைத்தனர்.
Related Tags :
Next Story