வெறிநாய்கள் கடித்து 10 பேர் காயம்


வெறிநாய்கள் கடித்து 10 பேர் காயம்
x
தினத்தந்தி 17 Feb 2022 12:45 AM IST (Updated: 17 Feb 2022 12:45 AM IST)
t-max-icont-min-icon

தூத்தூர் பகுதியில் வெறிநாய்கள் கடித்ததில் 10 பேர் காயமடைந்துள்ளனர். நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொல்லங்கோடு, 
தூத்தூர் பகுதியில் வெறிநாய்கள் கடித்ததில் 10 பேர் காயமடைந்துள்ளனர். நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வெறிநாய்கள்                   நடமாட்டம்
கொல்லங்கோடு அருகே தூத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட மீனவ கிராம பகுதிகளில் வெறிநாய்களின் நடமாட்டம் அதிகமாக காணப்பட்டு வருகிறது. 
இந்த நாய்கள் சாலையில் நடந்து செல்லும் ஆண்கள், பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் என அனைவரையும் கடித்து வருவதாக ஊர் மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். 
மருந்து தட்டுப்பாடு
கடந்த வாரம் சின்னத்துறை பகுதியில் உள்ள ஒரு கிறிஸ்தவ ஆலயத்துக்குள் புகுந்த வெறிநாய் ஒன்று அங்கு பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த  ஒரு பெண் உள்பட 3 பேரை கடித்து குதறியது.
கடந்த வாரத்தில் ஒரேநாளில் சின்னத்துறை, இரவிபுத்தன்துறை, பூத்துறை உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த 10-க்கும் மேற்பட்டவர்களை நாய்கள் கடித்துள்ளது. வெறிநாய் கடித்து அதிகமானோர் சிகிச்சைக்காக தூத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு செல்கின்றனர். அங்கு ஊசி மருந்துக்கு தட்டுபாடு ஏற்பட்டு உள்ளது.
பொதுமக்கள் கோரிக்கை
இதனால், அந்த பகுதியில் பொதுமக்கள், சிறுவர்கள், குழந்தைகள் வெளியே நடமாட அச்சப்பட்டு வீட்டுக்குள்ளேயே முடங்கி உள்ளனர்.
எனவே, சாலைகளில் சுற்றித்திரியும் வெறிநாய்களை பிடிக்கவும், அரசு ஆரம்ப சுகாதர நிலையங்களில் வெறிநாய் கடிக்கு போதியளவில் மருந்துகளை இருப்பு வைக்கவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story