திருப்பரங்குன்றம் ரதவீதியில் சுவாமி புறப்பாடு


திருப்பரங்குன்றம் ரதவீதியில் சுவாமி புறப்பாடு
x
தினத்தந்தி 17 Feb 2022 1:42 AM IST (Updated: 17 Feb 2022 1:42 AM IST)
t-max-icont-min-icon

திருப்பரங்குன்றம் ரதவீதியில் சுவாமி புறப்பாடு

திருப்பரங்குன்றம்,
திருப்பரங்குன்றம் கோவிலில் கடந்த 11 மாதங்களுக்கு பிறகு ரதவீதிகளில் சாமி புறப்பாடு நேற்று நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சுவாமி புறப்பாடு
உலகத்தை உலுக்கிய கொேரானா வைரஸ் பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக வழிபாட்டு தலங்களில் திருவிழாக்கள் சுவாமி புறப்பாடு சில நிபந்தனைக்கு உட்பட்டு நடந்து வந்தது. சில தளர்வின் காரணமாக சில திருவிழாக்கள் கோவிலுக்குள்ளே நடைபெற்றது. இதனால் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் சுவாமி புறப்பாடு வீதி உலா ரத்து செய்யப்பட்டது. எனவே கடந்த 11 மாதங்களாக ரதவீதிகளில் சுவாமி புறப்பாடு இல்லாத நிலை இருந்து வந்தது.
இந்த நிலையில் தற்போது அனைத்து கட்டுப்பாடுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பல்வேறு கோவில்களில் வழக்கம் போல திருவிழாக்கள் நடந்து வருகிறது. அதன்படி திருப்பரங்குன்றம் கோவிலில் கடந்த 1-ந்தேதி முதல் 10-ந்தேதி வரையிலுமாக கோவிலுக்குள்ளே உள்திருவிழாவாக தெப்ப உற்சவ திருவிழா நடைபெற்றது. ஆனால் வரலாற்றிலேயே முதல்முறையாக இந்த ஆண்டில் தெப்ப உற்சவம் ரத்து செய்யப்பட்டது.
11 மாதத்திற்கு பிறகு
இந்த நிலையில் கடந்த 11 மாதத்திற்கு பிறகு மாசி பவுர்ணமி நாளான நேற்று தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமி எழுந்தருளி நகர்வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதைக்கண்ட அப்பகுதி பொதுமக்களும், பக்தர்கள் பரவசம் அடைந்து வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, வீரவேல் முருகனுக்கு அரோகரா என்று பக்தி கோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.

Next Story