ஐ.ஏ.எஸ். அதிகாரி வீட்டில் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை


ஐ.ஏ.எஸ். அதிகாரி வீட்டில் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 17 Feb 2022 1:50 AM IST (Updated: 17 Feb 2022 1:50 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சையில், ஐ.ஏ.எஸ். அதிகாரி வீட்டில் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். அவர் தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தஞ்சாவூர்:
தஞ்சையில், ஐ.ஏ.எஸ். அதிகாரி வீட்டில் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். அவர் தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஐ.ஏ.எஸ். அதிகாரி
தஞ்சை மாவட்ட கூடுதல் கலெக்டராக(வளர்ச்சி) பணியாற்றி வருபவர் ஸ்ரீகாந்த். ஐ.ஏ.எஸ். அதிகாரியான இவர், தஞ்சை-புதுக்கோட்டை சாலையில் அரசு அலுவலர்கள் குடியிருப்பில் உள்ள பங்களாவில் தங்கி உள்ளார். இந்த நிலையில் அவர் உள்ளாட்சி தேர்தல் பார்வையாளராக தென்காசி மாவட்டத்திற்கு ஸ்ரீகாந்த் நியமிக்கப்பட்டார்.
இதனையடுத்து அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தேர்தல் பணிக்காக அங்கு சென்று விட்டார். இதனால் தற்போது இவருடைய வீட்டில் யாரும் இல்லை. ஸ்ரீகாந்தின் கார் டிரைவராக ராஜசேகர்(வயது 35) என்பவர் பணிபுரிந்து வந்தார். இவர் தஞ்சை கூட்டுறவு காலனியில் வசித்து வந்தார்.
டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை
இந்த நிலையில் டிரைவர் ராஜசேகருக்கு, கூடுதல் கலெக்டர் ஸ்ரீகாந்ந் வீட்டின் மாடியில் ஒரு அறையை தங்குவதற்கு கொடுத்துள்ளார். அந்த அறையில் நேற்று இரவு டிரைவர் ராஜசேகர் தூக்கில் பிணமாக தொங்கினார். இதனை பார்த்த காவலாளி இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் தஞ்சை நகர தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் தஞ்சை தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தூக்கில் பிணமாக தொங்கிய ராஜசேகர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் விசாரணை
மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜசேகர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது பணிச்சுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது தற்கொலைக்கு வேறு எதுவும் காரணமா? என விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஐ.ஏ.எஸ். அதிகாரி வீட்டில் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தஞ்சையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story