டாஸ்மாக் ஊழியரிடம் ரூ. 2 லட்சம் பறிமுதல்
விருதுநகரில் டாஸ்மாக் ஊழியரிடம் ரூ. 2 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
விருதுநகர்,
விருதுநகர் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வருபவர் சரவணகுமார் (வயது 44). இவர் வேலை நேரம் முடிந்த பின்பு கடையை பூட்டிவிட்டு விற்பனைத் தொகை ரூ.1 லட்சத்து 91 ஆயிரத்து 560-ஐ தனது இருசக்கர வாகனத்தில் இந்நகர் பரங்கிரிநாதபுரத்தில் உள்ள தனது வீட்டுக்கு கொண்டுசென்றார். அப்போது தேர்தல் பறக்கும் படை தாசில்தார் பொன்ராஜ் தலைமையிலான குழுவினர் இந்நகர் புல்லலக்கோட்டை ரோட்டில் சரவணகுமாரின் இருசக்கர வாகனத்தை சோதனை செய்தனர். அப்போது அதில் இருந்த ரூ.1 லட்சத்து 91 ஆயிரத்து 560-ஐ பறிமுதல் செய்தனர். உரிய ஆவணங்கள் இல்லாததால் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story