தொழிலாளர்கள் சாலை மறியல்


தொழிலாளர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 17 Feb 2022 2:06 AM IST (Updated: 17 Feb 2022 2:06 AM IST)
t-max-icont-min-icon

ஒரத்தநாடு அருகே 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் வேலை வழங்கக்கோரி தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஒரத்தநாடு:
ஒரத்தநாடு அருகே 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் வேலை வழங்கக்கோரி தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சாலைமறியல்
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு ஒன்றியம் ஆழிவாய்க்கால் ஊராட்சியை சேர்ந்த  தெற்கு நத்தம் பகுதியில் கூலி தொழிலாளர்கள் அதிகம் உள்ளனர். இவர்களுக்கு கடந்த சில மாதங்களாக 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் வேலை வழங்கப் படவில்லை. 
இதனால் பாதிக்கப்பட்ட அப்பகுதியை சேர்ந்த தொழிலாளர்கள் நேற்றுமுன்தினம் ஒரத்தநாடு - வல்லம் சாலையில் தெற்கு நத்தம் கிராமத்தில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். 
போக்குவரத்து பாதிப்பு
தகவல் அறிந்ததும் ஒரத்தநாடு வட்டார வளர்ச்சி அலுவலர்(கி.ஊ)ரகுநாதன் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் விரைவாக வேலை வழங்குவதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதனை தொடர்ந்து கூலி தொழிலாளர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டம் காரணமாக அப்பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story