தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
பயணியர் நிழற்குடை வேண்டும்
மதுரை மாவட்டம் துவரிமான், கோச்சடைக்கு மேலக்கால் வழியாக செல்லும் சாலை பஸ் நிறுத்தத்தில் பயணியர் நிழற்குடை இல்லை. இந்த பஸ் நிறுத்தத்தில் ஏராளமான பள்ளி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் மற்றும் பெண்கள் நிழற்குடை இல்லாமல் வெயிலிலும், மழையிலும் நின்று சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இங்கு பயணிகள் நிழற்குடையை அமைத்துதர வேண்டும்.
ராஜா, கோச்சடை.
தேங்கிய கழிவுநீர்
விருதுநகர் மாவட்டம் தம்பிபட்டி 2-வது வார்டு தெருவில் குப்பைகள் அடைத்து கழிவுநீர் கால்வாய் தேங்கியுள்ளது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகிறது. தேங்கியுள்ள கழிவுநீரால் நோய்தொற்று பரவி சுகாதார சீர்கேடு அடைய வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாரிமுத்து, தம்பிபட்டி.
போக்குவரத்து நெரிசல்
மதுரை மாவட்டம் சிம்மக்கல்-கோரிப்பாளையம் சாலை போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகிறது. காலை மற்றும் மாலை வேளைகளில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலை முடிந்து வீடு திரும்புவோர், ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்குகின்றன. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இப்பகுதியில் நிலவிவரும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த வேண்டும்.
அன்புமணி, மதிச்சியம்.
கால்நடை மருத்துவமனை தேவை
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே கிருஷ்ணபுரம் ஊராட்சி மாலையபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கால்நடை மருத்துவமனை இல்லை. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தாங்கள் வளர்க்கும் ஆடு, மாடு, கோழிகளை சிகிச்சைக்காக பல கிலோமீட்டர் அழைத்து செல்கின்றனர். இங்கு கால்நடை மருத்துவமனை அமைக்கப்படுமா?
ராமலிங்கம், கிருஷ்ணபுரம்.
சுகாதார சீர்கேடு
மதுரை மாவட்டம் கள்ளிக்குடி தாலுகா பேய்க்குளம் கிராமம் 1-வது வார்டு கிழக்கு தெரு பாலத்தின் அடியில் சாக்கடை கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதியில் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகிறது. துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடாகவும் மாறி வருகிறது. பொதுமக்களுக்கும் நோய்தொற்று பரவும் அபாயம் உள்ளது. பொதுமக்களின் நலன்கருதி சாக்கடை கால்வாயை தூர்வார வேண்டும்.
முருகன், பேய்க்குளம்.
சேதமடைந்த மின்கம்பம்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சி சாமிபுரம் காலனி பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள மின்கம்பம் சேதமடைந்துள்ளது. இதனால் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அச்சத்துடன் கடந்து செல்கின்றனர். சிறு குழந்தைகள், பெண்கள் அதிக அளவில் வசிக்கும் இப்பகுதியில் அசம்பாவிதம் ஏற்படும் முன்னர் மின்வாரியதுறை அதிகாரிகள் சேதமடைந்துள்ள மின்கம்பத்தை அகற்றுவார்களா? .
முருகன், சிவகாசி.
குண்டும், குழியுமான சாலை
மதுரை மாவட்டம் காஜிமார் தெரு சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இப்பகுதி வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அடிக்கடி விபத்துகளும் நடக்கிறது. வாகன ஓட்டிகளின் நலன்கருதி குண்டும், குழியுமான இந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரபீ, மதுரை.
Related Tags :
Next Story