தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை


தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 17 Feb 2022 2:25 AM IST (Updated: 17 Feb 2022 2:25 AM IST)
t-max-icont-min-icon

திருமணம் நிச்சயிக்கப்பட்ட தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வத்திராயிருப்பு, 
வத்திராயிருப்பு அருகே உள்ள கூமாப்பட்டி ராமசாமியாபுரம் கீழத்தெருவை சேர்ந்தவர் நீராத்தலிங்கம் மகன் குமார் (வயது 27). தொழிலாளி. இவருக்கு இன்னும் ஒரு வாரத்தில் கல்யாணம் நடைபெற இருந்தது. திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட குமார் தனது அம்மா செல்வியிடம் குடிப்பதற்காக பணம் கேட்டு தகராறு செய்ததாக கூறப்படுகிறது. அதற்கு செல்வி பணம் தர மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த குமார் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கூமாப்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பம் குறித்து கூமாப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


Next Story