அத்தாணி பேரூராட்சி 3-வது வார்டு தி.மு.க. வேட்பாளர் மரணம்; தேர்தல் நிறுத்தி வைப்பு
அத்தாணி பேரூராட்சி 3-வது வார்டு தி.மு.க. வேட்பாளர் மரணம் அடைந்தார். அதனால் அந்த வார்டில் மட்டும் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
அந்தியூர்
அத்தாணி பேரூராட்சி 3-வது வார்டு தி.மு.க. வேட்பாளர் மரணம் அடைந்தார். அதனால் அந்த வார்டில் மட்டும் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தி.மு.க. வேட்பாளர்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ளது. இன்றுடன் (வியாழக்கிழமை) பிரசாரம் ஓய்கிறது. அதனால் வேட்பாளர்கள் புயலாய் வாக்கு வேட்டையில் ஈடுபட்டுள்ளார்கள்.
இந்தநிலையில் ஈரோடு மாவட்டம் அத்தாணி பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இதில் 3-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு தி.மு.க. வேட்பாளராக பெருமாபாளையத்தை சேர்ந்த அய்யப்பன் (வயது 51) என்பவர் போட்டியிட்டார். கடந்த ஒரு வாரமாக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார்.
நெஞ்சுவலி
இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு பிரசாரம் முடிந்து அய்யப்பன் வீட்டுக்கு வந்தார். பின்னர் சாப்பிட்டுவிட்டு தூக்கினார். இந்தநிலையில் நேற்று அதிகாலை தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறியுள்ளார். உடனே வீட்டில் இருந்தவர்கள் அவரை அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். ஆனால் அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே அய்யப்பன் இறந்துவிட்டதாக கூறினார்கள். இதுபற்றி ஆப்பக்கூடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தேர்தல் நிறுத்திவைப்பு
வேட்பாளர் திடீரென இறந்துவிட்டதால் சம்பந்தப்பட்ட அத்தாணி பேரூராட்சியின் 3-வது வார்டில் மட்டும் தேர்தலை நிறுத்தி வைப்பதாக, அத்தாணி பேரூராட்சி தேர்தல் நடத்தும் அதிகாரி நாகேஸ்வரன் அறிவித்துள்ளார்.
மரணமடைந்த தி.மு.க. வேட்பாளர் அய்யப்பனுக்கு சாந்தி (45) என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.
Related Tags :
Next Story