பவானிசாகர் பகுதியில் சம்பங்கி பூ விலை உயர்வு; விவசாயிகள் மகிழ்ச்சி


பவானிசாகர் பகுதியில் சம்பங்கி பூ விலை உயர்வு; விவசாயிகள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 17 Feb 2022 2:58 AM IST (Updated: 17 Feb 2022 2:58 AM IST)
t-max-icont-min-icon

பவானிசாகர் பகுதியில் சம்பங்கி பூ விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பவானிசாகர்
பவானிசாகர் பகுதியில் சம்பங்கி பூ விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பூக்கள்
பவானிசாகர் மற்றும் சுற்றுப்பகுதியான தொட்டம்பாளையம், தொப்பம்பாளையம், எரங்காட்டூர், அக்கரைதத்தபள்ளி, கொத்தமங்கலம், கெஞ்சனூர், பகுத்தம்பாளையம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் மல்லிகை, முல்லை, காக்கடா, சம்பங்கி உள்ளிட்ட பூக்கள் சாகுபடி செய்துள்ளனர். தினமும் இப்பகுதியில் இருந்து சுமார் 5 டன் பூக்கள் விளைகிறது. 
இங்கு விளையும் பூக்களை வியாபாரிகள் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்கிறார்கள்.
விலை உயர்வு
கொள்முதல் செய்யும் பூக்களை வியாபாரிகள் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளுக்கும் கர்நாடக மாநிலம் மைசூரு, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கும் அனுப்புகின்றனர். நாள்தோறும் பூக்களின் விலை தேவைக்கு ஏற்ப மாறுபடுகிறது.
இந்தநிலையில் பவானிசாகர் பகுதியில் நேற்று முன்தினம் ஒரு கிலோ சம்பங்கி ரூ.100-க்கு விற்பனையானது. நேற்று கிலோவிற்கு ரூ.25 அதிகரித்து ஒரு கிலோ ரூ.125-க்கு விற்பனையானது. 
சம்பங்கி பூ விலை அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Related Tags :
Next Story