முன்னாள் எம்.எல்.ஏ. எச்.டி.சவுடய்யா மரணம்


முன்னாள் எம்.எல்.ஏ. எச்.டி.சவுடய்யா மரணம்
x
தினத்தந்தி 17 Feb 2022 3:32 AM IST (Updated: 17 Feb 2022 3:32 AM IST)
t-max-icont-min-icon

முன்னாள் எம்.எல்.ஏ. சவுடய்யா மரணம் அடைந்தார்.

பெங்களூரு: மண்டியா மாவட்டம் ஹொலலு கிராமத்தை சேர்ந்தவர் எச்.டி. சவுடய்யா. முன்னாள் எம்.எல்.ஏ.வான இவர் உடல்நலக்குறைவு, வயோதிகம் காரணமாக நேற்று முன்தினம் இரவு மரணம் அடைந்தார். அவரது வயது 94.

 மண்டியா மாவட்டம் ஹொலலு கிராமத்தில் கடந்த 1928-ம் ஆண்டு பிறந்த எச்.டி.சவுடய்யா, கடந்த 1978-ம் ஆண்டு நடந்த தேர்தலில் மண்டியா மாவட்டம் கெரகோடு தொகுதியில் இருந்து ஜனதாதளம் (எஸ்) கட்சி சார்பில் முதல்முறையாக கர்நாடக சட்டசபைக்கு எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டார்.

அதன்பின்னர் 1983, 1985, 1999-ம் ஆண்டுகளில் காங்கிரஸ் சார்பில் எச்.டி.சவுடய்யா 3 முறை கெரகோடு தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்று இருந்தார். 1992-ம் ஆண்டு மேல்-சபை உறுப்பினராகவும் அவர் பணியாற்றி இருந்தார். 

எச்.டி.சவுடய்யாவின் உடல் அவரது கிராமத்தில் போலீஸ் மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. எச்.டி. சவுடய்யாவின் மறைவுக்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, காங்கிரஸ் தைைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

Next Story