திருக்கோவிலூர் தீர்த்தகுளத்தில் உலகளந்தபெருமாளுக்கு தீர்த்தவாரி


திருக்கோவிலூர் தீர்த்தகுளத்தில் உலகளந்தபெருமாளுக்கு தீர்த்தவாரி
x
தினத்தந்தி 17 Feb 2022 5:07 AM IST (Updated: 17 Feb 2022 5:07 AM IST)
t-max-icont-min-icon

திருக்கோவிலூர் தீர்த்தகுளத்தில் உலகளந்தபெருமாளுக்கு தீர்த்தவாரி

திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் உலகளந்தபெருமாள் கோவிலில் மாசிமக திருவிழாவையொட்டி நேற்று காலை சாமிக்கு சிறப்பு அலங்கார, ஆராதனை மற்றும் சிறப்பு பூஜை நடைபெற்றது. 

இதைத் தொடர்ந்து திருமஞ்சன நிகழ்ச்சியும், தீர்த்தகுளத்தில் சாமிக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடைபெற்றது. பின்னர் மாலையில் சாமிபுறப்பாடும் பின்னர் தீர்த்தவாரி குளத்தில் தெப்ப உற்சவமும் நடைபெற்றது. இதில் திருக்கோவிலூர் மற்றும் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் விழாக்குழுவினர், உபயதாரர்கள் ஆகியோர் செய்தனர்.

Next Story