மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம்


மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம்
x
தினத்தந்தி 17 Feb 2022 7:10 AM IST (Updated: 17 Feb 2022 7:10 AM IST)
t-max-icont-min-icon

அரக்கோணம் அருகே மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் நடந்தது.

அரக்கோணம்

அரக்கோணத்தை அடுத்த வளர்புரம் கிராமத்தில் மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்யேக அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமில் 147 பேர் கலந்து கொண்டனர். அவர்களில் 97 நபர்களுக்கு ஸ்மார்ட் கார்டுக்கு பதிவும் மற்றும் 104 நபர்களுக்கு முதல்-அமைச்சர் மருத்துவ காப்பீடு திட்டத்தில் பதிவும் மேற்கொள்ளப்பட்டது. ரூ1500- க்கான பராமரிப்பு உதவித்தொகைக்கு 7 விண்ணப்பங்கள், 13 பேருக்கு பெட்ரோல் ஸ்கூட்டருக்கு 23 பேர் மற்றும் வீடு கட்டும் திட்டத்திற்கு விண்ணப்பங்களை கலெக்டர் பெற்றார். அப்போது அரக்கோணம் உதவி கலெக்டர் சிவதாஸ், தாசில்தார் பழனிராஜன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணகுமார் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Next Story