வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பணி ஒதுக்கீடு


வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பணி ஒதுக்கீடு
x
தினத்தந்தி 17 Feb 2022 5:35 PM IST (Updated: 17 Feb 2022 5:35 PM IST)
t-max-icont-min-icon

வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பணி ஒதுக்கீடு

ிருப்பூர் மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பணியாற்றும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான மூன்றாவது கட்ட கணினி சுழற்சி முறையில் பணி ஒதுக்கீடு செய்யும் பணி நேற்று திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் வினீத், மாநகராட்சி தேர்தல் அதிகாரியான ஆணையாளர் கிராந்திகுமார் பாடி ஆகியோர் முன்னிலையில் இந்த பணி நடைபெற்றது.
மாவட்டத்தில் 1 மாநகராட்சி, 6 நகராட்சிகள், 15 பேரூராட்சிகளில் 1,299 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நாளை  நடக்கிறது. இந்த வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு கணினி முறையில் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மாநகராட்சியில் 776 வாக்குச்சாவடிகளில் தலா 4 அலுவலர்கள் வீதம் 3,104 அலுவலர்களும், 6 நகராட்சிகளுக்கு 279 வாக்குச்சாவடிகளுக்கு தலா 4 அலுவலர்கள் வீதம் 1,116 அலுவலர்களும், 15 பேரூராட்சிகளுக்கு 244 வாக்குச்சாவடிகளில் தலா 4 அலுவலர்கள் வீதம் 976 அலுவலர்கள் என மொத்தம் 6 ஆயிரத்து 236 அலுவலர்களுக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது.


Next Story