வாகனம் மோதி முதியவர் சாவு
விளாத்திகுளம் அருகே வாகனம் மோதியதில் முதியவர் பலியானார்
எட்டயபுரம்:
விளாத்திகுளம் அருகே உள்ள சின்னூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்னுபாண்டி (வயது 60). இவர் நேற்று முன்தினம் கோவில் குமரெட்டியபுரம் கோவில் பத்தாம் திருவிழாவை காண துரைச்சாமிபுரம் கிராமத்தில் இருந்து இரவில் சாலை ஓரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலத்த காயங்களுடன் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். நேற்று அதிகாலை அப்பகுதியில் விவசாய வேலைக்கு சென்றவர்கள் அவர் பிணமாக கிடப்பதை பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காடல்குடி போலீசார், அவரத் சடலத்தை மீட்டு விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காடல்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் மீது மோதிவிட்டு சென்ற வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story