சகோதரர்கள் மீது வழக்குப்பதிவு


சகோதரர்கள் மீது வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 17 Feb 2022 10:48 PM IST (Updated: 17 Feb 2022 10:48 PM IST)
t-max-icont-min-icon

போலி ஆவணம் தயாரித்து விவசாயி இடத்தை அபகரித்த சகோதரர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

வெளிப்பாளையம்:
வேளாங்கண்ணி அருகே தெற்கு பொய்கைநல்லூர் கீழத்தெருவைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். விவசாயியான இவர், தனக்கு சொந்தமான 350 சதுர அடி இடத்தை அதே பகுதியைச் சேர்ந்த குணமூர்த்தி மற்றும் அவரது சகோதரர் ராமமூர்த்தி ஆகியோர் போலியாக ஆவணம் தயாரித்து பட்டா மாற்றம் செய்து அபகரித்ததாக  நாகை மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசில்  புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் குணமூர்த்தி மற்றும் அவரது சகோதரர் ராமமூர்த்தி ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை  நடத்தி வருகின்றனர்.

Next Story