‘தினத்தந்தி’ புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
குடிநீர் வசதி வேண்டும்
நாகை மாவட்டம் வேதாரண்யம் வட்டம் தாணிக்கோட்டகம் ஊராட்சி காமாட்சி காடு கிராமம் லெட்சுமி ஆறு வடக்கு கரை பகுதியில் 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் குடிநீர் வசதி செய்து தரப்படவில்லை. இதனால் பெண்கள், குழந்தைகள் மற்றும் மாணவ-மாணவிகள் குடிநீரின்றி மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மேலும் குடிநீருக்காக பொதுமக்கள் நீண்ட தூரம் பயணம் செய்து குடங்களில் தண்ணீர் பிடித்து வருகின்ற சூழல் உள்ளது. எனவே பொதுமக்களின் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் குடிநீர் வசதி செய்து தர நடவடிக்கை எடுப்பார்களா?
-முத்துக்குமார், தாணிக்கோட்டகம்.
Related Tags :
Next Story