திருக்கோவிலூர் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 330 மதுபாட்டில்கள் பறிமுதல்

திருக்கோவிலூர் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 330 மதுபாட்டில்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 17 Feb 2022 11:26 PM IST (Updated: 17 Feb 2022 11:26 PM IST)
t-max-icont-min-icon

திருக்கோவிலூர் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 330 மதுபாட்டில்கள் பறிமுதல்

திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் அருகே அரகண்டநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா, சப்-இன்ஸ்பெக்டர் புனிதவள்ளி மற்றும் போலீசார்  வீரபாண்டி கிராமத்தில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டில் போலீசார் சோதனை நடத்தியபோது அங்கு 330 மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக அதே ஊரைச் சேர்ந்த சுரேஷ் என்கிற கட்ட சுரேஷ் என்பவர் மீது போலீசார்  வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story