தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டி
எரியாத விளக்குகள்
மெதுகும்மல் பஞ்சாயத்திற்குட்பட்ட அதங்கோடு இலவிளை கிராமத்தில் தெருவிளக்குகள் ஓராண்டுக்கு மேலாக எரியவில்லை . இதனால் பொதுமக்களும் வாகனஓட்டிகளும் பெரும் அவதியடைந்து வருகின்றனர் .எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெருவிளக்குகளை எரியவைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
-ஜெபின், மெதுகும்மல்.
விபத்து அபாயம்
மணிக்கட்டிபொட்டல் அரசமூடு சந்திப்பு உள்ளது. இந்த சந்திப்பு பகுதியில் சாலையோரத்தில் பக்கச்சுவர் எழுப்பாமல் ஒருவரது வீட்டு மின் இணைப்பு பெட்டி அமைக்கப்பட்டுள்ளது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி உயிரிழக்கும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மின் இணைப்பு பெட்டியை பாதுகாப்பான முறையில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அணஞ்ச பெருமாள், தர்மபுரம்.
நாய்கள் தொல்லை
நாகர்கோவில் வடசேரி பஸ்நிலையம் அருகில் ஆவின் பாலகம் உள்ளது. இரவு நேரம் இந்த பாலகத்தின் முன்பகுதியிலும், பஸ்நிலையத்திலும் நாய்கள் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளை நாய்கள் விரட்டுவதால் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, அந்த பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ரபீக், நாகர்கோவில்.
தடுப்பு சுவர் தேவை
கடுக்கரை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சிவன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் அருகில் திடல், காட்டுப்புதூர் செல்லும் சாலையில் வளைவு பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் இருபுறமும் விபத்து தடுப்பு சுவர் அமைக்கப்படாமல் உள்ளது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, பாலத்தின் இருபுறமும் தடுப்பு சுவர் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-லெட்சுமணன், கடுக்கரை.
பஸ்கள் சீரமைக்கப்படுமா?
மார்த்தாண்டத்தில் இருந்து கருங்கல் வழித்தடத்தில் 88 ‘டி’ சர்க்குலர் பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ்சின் மேற்கூரை சேதமடைந்துள்ளதால் மழைக்காலங்களில் ஒழுகுகிறது. இதனால், பயணிகள் பஸ்சிற்குள் குடைகளை பிடித்தபடி பயணம் செய்யவேண்டிய அவலநிலைக்கு தள்ளப்படுகிறார்கள். எனவே, பயணிகள் நலன் கருதி சேதமடைந்துள்ள பஸ்சின் மேற்கூரையை சீரமைக்கவோ அல்லது மாற்று பஸ் இயக்கவோ சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.
-ஜெஸ்பின், சிராயன்குழி.
தடுப்பு வேலி அமைக்க வேண்டும்
நாகர்கோவில், ஒழுகினசேரி பாலத்தின் அருகில் சாலையோரத்தில் தடுப்பு வேலிகள் அமைக்கப்படாமல் காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக வரும் வாகனங்கள் நிலைதடுமாறி சாலையோரத்தில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் சிக்க வாய்ப்புகள் உள்ளன. எனவே, வாகன ஓட்டிகள் நலன் கருதி அந்த பகுதியில் தடுப்பு வேலிகள் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-புகழேந்தி, ஆரல்வாய்மொழி.
வேகத்தடை அவசியம்
கொட்டாரம் நாலு முக்கு சந்திப்பு பகுதி உள்ளது. முக்கிய சந்திப்பான இந்த பகுதியில் அரசு தொடக்கப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி, தபால்நிலையம், ஆட்டோ, பஸ் நிறுத்தங்கள் உள்ளன. ஆனால், இந்த சந்திப்பில் சாலையில் வேகத்தடை அமைக்கப்படாமல் உள்ளது. இதனால், வேகமாக வரும் வாகனங்கள் சாலையை கடக்கும் பொதுமக்கள் மீது மோதி உயிரிழப்புகளை ஏற்படுத்த வாய்ப்புகள் உள்ளன. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த பகுதியில் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கே.மணிகண்டன், கொல்லவிளை தெரு, வடசேரி.
Related Tags :
Next Story