பழையாறு மீனவர்கள் 5 ஆயிரம் பேர் கடலுக்கு செல்லவில்லை
டீசல் விலை உயர்வை கண்டித்து பழையாறு மீனவர்கள் 5 ஆயிரம் பேர் மீன்பிடிக்க கடலுக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கொள்ளிடம்:
டீசல் விலை உயர்வை கண்டித்து பழையாறு மீனவர்கள் 5 ஆயிரம் பேர் மீன்பிடிக்க கடலுக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பழையாறு மீன்பிடி துறைமுகம்
கொள்ளிடம் அருகே உள்ள பழையாறு மீன்பிடி துறைமுகத்தின் மூலம் தினந்தோறும் 350 விசைப்படகுகள், 300 பைபர் படகுகள் மற்றும் 250 நாட்டுப்படகுகள் மூலம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்று வருவர். விசைப்படகுகள் மற்றும் பைபர் படகுகளுக்கு பழையாறு துறைமுகத்தில் மீன்வளத்துறை சார்பில் பெட்ரோல் பங்க் மூலம் மானிய விலையில் டீசல் வழங்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் சாதாரணமாக தனியார் பங்கு மூலம் ஒரு லிட்டர் டீசல் ரூ.93.19-க்கு விற்பனை செய்து வருகின்றனர். ஆனால் துறைமுகத்தில் மீன்பிடி துறையின் மூலம் விற்பனை செய்யப்படும் டீசல் ஒரு லிட்டர் ரூ.101.80-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. துறைமுகத்தில் உள்ள பங்க் மூலம் மீனவர்களுக்கு மானிய விலையில் ஒரு லிட்டர் டீசல் ரூ.83.59-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மீனவர்கள் போராட்டம்
முறைப்படி தனியார் பங்க் மூலம் விற்பனை செய்துவரும் நிலையில் 20 சதவீதம் குறைத்து மானியமாக வழங்க வேண்டும் என்பதே விதி. அப்படி வழங்கினால் ஒரு லிட்டர் டீசல் ரூ.72-க்கு மீனவர்களுக்கு கிடைக்கும். ஆனால் தற்போது அதிக விலை கொடுத்து டீசல் வாங்க வேண்டிய நிலை இருந்து வருகிறது.
இதனால் டீசல் விலை உயர்வை எதிர்த்து நேற்று 5 ஆயிரம் மீனவர்கள் கடலுக்குள் பிடிக்க செல்லாமல், படகுகளை மீன்பிடி துறைமுகத்தில் படகு அணையும் தளத்தில் நிறுத்திவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து பழையாறு விசைப்படகு மற்றும் பைபர் படகு உரிமையாளர்கள் கூறுகையில், உடனடியாக டீசல் உயர்வை அரசு குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
Related Tags :
Next Story