குடிசை மேம்பாட்டு திட்டத்தில் கோடிக்கணக்கில் ஊழல் கிரித் சோமையா மீது சஞ்சய் ராவத் புதிய புகார்


கோப்பு படம்
x
கோப்பு படம்
தினத்தந்தி 18 Feb 2022 12:32 AM IST (Updated: 18 Feb 2022 12:32 AM IST)
t-max-icont-min-icon

குடிசை மேம்பாட்டு திட்டத்தில் கோடிக்கணக்கான ரூபாய் ஊழல் செய்திருப்பதாக கிரித் சோமையா மீது சஞ்சய் ராவத் புதிய புகாரை முன்வைத்துள்ளார்.

மும்பை, 
குடிசை மேம்பாட்டு திட்டத்தில் கோடிக்கணக்கான ரூபாய் ஊழல் செய்திருப்பதாக கிரித் சோமையா மீது சஞ்சய் ராவத் புதிய புகாரை முன்வைத்துள்ளார். 
புதிய குற்றசாட்டு
சிவசேனா தலைமை செய்தி தொடர்பாளரான சஞ்சய் ராவத் பா.ஜனதா தலைவர்கள் மீது தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். 
சமீபத்தில் அளித்த பேட்டியில் கூட முந்தை பா.ஜனதா ஆட்சியின்போது மராட்டிய தகவல் தொழில்நுட்ப கழகத்தில் ரூ.25 ஆயிரம் கோடி ஊழல் நடந்ததாக தெரிவித்தார். 
இதேபோல பா.ஜனதா தலைவர் கிரித் சோமையாவும், அவரது மகன் நீல் சோமையாவும் பி.எம்.சி. வங்கி ஊழலில் தொடர்புடைய ராகேஷ் வாதவனுடன் தொடர்பில் இருப்பதாக குற்றம் சாட்டினார். 
இந்தநிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் எம்.பி. கிரித் மோமையா மீது புதிய குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். 
இதுகுறிதது அவர் கூறியதாவது:-
போலி பயனாளிகள்
 பவாய் குடிசை மேம்பாட்டு திட்டத்தில் முறைகேடுகள் நடந்துள்ளன. இதில் மும்பையை சேர்ந்த முன்னாள் எம்.பி. கிரித் சோமையாவுக்கும் தொடர்பு உள்ளது. இதற்கு என்னிடம் ஒரு லாரி நிறைய ஆதாரங்கள் இருக்கின்றன. 
பெருபாக் குடிசைப்பகுதியில் 138 ஏக்கர் பரப்பளவில் நிலம் குடிசை மேம்பாட்டு திட்டத்திற்காக கையகப்படுத்தப்பட்டது.  இந்த திட்டத்தில் 433 போலி பயனாளிகள் உள்ளனர். 
பா.ஜனதா அப்போதைய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் இந்த திட்டத்திற்கு அனுமதி அளித்தார். 
ஒவ்வொரு போலி பயனாளியிடமும் இருந்தும் ரூ.25 லட்சம் பெறப்பட்டு உள்ளது. இதன்முலம் குடிசைப்பகுதியில் வசிப்பவர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். 
ரூ.7 ஆயிரத்து 500 கோடி மதிப்புள்ள இந்த மோசடியில் சோமையா ஈடுபட்டுள்ளார். முன்னாள் முதல்-மந்திரி பட்னாவிசுக்கு இந்த ஒப்பந்தங்கள் குறித்து தெரியாது. 
இந்த பிரச்சினை குறித்து விளக்கமளிக்க இன்று நான் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவை சந்திக்க உள்ளேன். 
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story