பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை


பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு  தற்கொலை
x
தினத்தந்தி 18 Feb 2022 1:13 AM IST (Updated: 18 Feb 2022 1:13 AM IST)
t-max-icont-min-icon

நெமிலி அருகே பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நெமிலி

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி - பனப்பாக்கம் ரோட்டுத் தெருவை சேர்ந்தவர் பார்த்தசாரதி, இவரது மகள் மஞ்சுப்பிரியா (வயது 29). 

இவருக்கும் சென்னை நங்கநல்லூரை சேர்ந்த நந்தகுமார் (34) என்பவருக்கும் ஒரு வருடத்துக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இருவரும் சாப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றி வந்தனர். 

கடந்த சில மாதங்களாக கணவன்- மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மஞ்சுப்பிரியா நெமிலியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு வந்துள்ளார்.

 இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மஞ்சுப்பிரியாவின் கணவர் விவாகரத்து கோரி சென்னை ஆலந்தூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

விசாரணைக்காக நீதிமன்றம் சென்று வந்தநிலையில், கடுமையான உளைச்சலில் இருந்த மஞ்சுப்பிரியா நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து மஞ்சுப்பிரியாவின் தாய் சரோஜாதேவி நெமிலி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 

மேலும் திருமணமாகி ஒரு வருடமே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Next Story