புதிதாக 14 பேருக்கு கொரோனா
மதுரையில் புதிதாக 14 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
மதுரை,
மதுரையில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. நேற்று 14 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதுபோல் நேற்று 68 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீட்டிற்கு சென்றனர். நேற்று மாலை நிலவரப்படி மதுரையில் கொரோனாவுடன் சிகிச்சையில் இருப்பவர்கள் எண்ணிக்கை 245 ஆக உள்ளது. இதில் 15 பேர் வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள். இதுதவிர 55 பேர் வீட்டு தனிமைப்படுத்துதலில் டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில் இருக்கிறார்கள். மீதம் உள்ளவர்கள், மதுரை அரசு ஆஸ்பத்திரி, தனியார் ஆஸ்பத்திரி மற்றும் கண் காணிப்பு மையங்களில் சிகிச்சையில் இருக்கிறார்கள். மதுரையில் நேற்று யாரும் கொரோனா பாதிப்பால் உயிரிழக்கவில்லை.
Related Tags :
Next Story