வடமாநில தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை


வடமாநில தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 18 Feb 2022 1:32 AM IST (Updated: 18 Feb 2022 1:32 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் வடமாநில தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

நெல்லை:
உத்தரபிரதேச மாநிலம் திக்கொண்டா பகுதியை சேர்ந்தவர் ராம் பவன் (வயது 25). இவர் நெல்லை அருகே உள்ள கங்கைகொண்டான் சிப்காட்டில் தங்கியிருந்து தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். 
இந்த நிலையில் இவர் நேற்று முன்தினம் இரவு தனது அறையில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். 
உடனே சக தொழிலாளிகள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ராம் பவன் நேற்று காலை பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கங்கைகொண்டான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story