கெட்டுப்போன 50 கிலோ மீன்கள் பறிமுதல்
கெட்டுப்போன 50 கிலோ மீன்கள் பறிமுதல்
சிவகாசி
சிவகாசி பகுதியில் உள்ள மீன்கடைகளில் மீன்வள உதவி இயக்குனர் ராஜேந்திரன், மீன் வள ஆய்வாளர் அபுதாவீர், மாநகராட்சி கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி, உணவுபாதுகாப்பு அலுவலர் ராஜாமுத்து, சுகாதார அதிகாரி சித்திக், மேற்பார்வையாளர்கள் முத்துராஜ், மாரியப்பன், ஆதிலட்சுமி ஆகியோர் அடங்கிய குழுவினர் திடீர் ஆய்வு செய்தனர். அப்போது சில கடைகளில் தரமற்ற மீன்கள் விற்பனை செய்தது தெரிய வந்தது. இதைதொடர்ந்து அந்த மீன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மொத்தம் 50 கிலோ மீன்கள் பினாயில் ஊற்றி அழிக்கப்பட்டது. சிவகாசி பகுதியில் உள்ள சில மீன் கடைகளில் நீண்டநாட்கள் மீன்களை இருப்பு வைக்க ரசாயனம் கலப்பது அதிகாரிகளின் ஆய்வில் தெரியவந்தது. இனி வரும் காலத்தில் ரசாயனம் கலந்த மீன்கள் விற்பனை செய்தால் அபராதம், உரிமம் ரத்து போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
Related Tags :
Next Story