தம்பி மனைவியை ஸ்குருடிரைவரால் குத்திய வாலிபர் கைது
நெல்லை அருகே தம்பி மனைவியை ஸ்குருடிரைவரால் குத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை:
நெல்லை கங்கைகொண்டான் அருகே உள்ள பருத்திகுளம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 33). இவருடைய தம்பி உடையார். இவர்கள் 2 பேரும் தந்தையின் பூர்வீக இடத்தில் ஆழ்குழாய் கிணறு அமைத்து அதற்கு மின்இணைப்பு கொடுத்து பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் முருகேசன் மின் இணைப்பை அகற்றியதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த உடையாரின் மனைவி பிரியா (27) முருகேசனை தட்டிக் கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த முருகேசன், பிரியாவை அவதூறாக பேசி தன் கையில் வைத்திருந்த ஸ்குருடிரைவரால் கழுத்தில் குத்தியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில் கங்கைகொண்டான் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அய்யப்பன் வழக்குப்பதிவு செய்து முருகேசனை கைது செய்தார்.
Related Tags :
Next Story