செல்போன் பறித்த 3 பேர் கைது


செல்போன் பறித்த 3 பேர் கைது
x
தினத்தந்தி 18 Feb 2022 2:17 AM IST (Updated: 18 Feb 2022 2:17 AM IST)
t-max-icont-min-icon

செல்போன் பறித்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்

பொன்மலைப்பட்டி
திருச்சி பொன்மலை ெரயில்வே காலனி பகுதியை சேர்ந்தவர் ஜெனிபர் டயானா (வயது 20). இவரிடம் இருந்து செல்போனை பறித்துக் கொண்டு தப்பிச் சென்ற குண்டூர் பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன் (20) என்பவரை போலீசார் கைது செய்தனர். இதேபோல் சுப்பிரமணியபுரம் ரஞ்சிதபுரம் கருப்பையா தெருவை சேர்ந்த மகாராஜனிடம் (54) செல்போனை பறித்ததாக பொன்மலை மலை அடிவாரம் பகுதியை சேர்ந்த கவுரிசங்கர் (21), அதே பகுதியை சேர்ந்த எடிசன் (20) ஆகிய 2 பேரை பொன்மலை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story