2-வது நாளாக கஞ்சி குடிக்கும் போராட்டம் நடத்திய பொதுமக்கள்
பழவூர் அருகே பொதுமக்கள் 2-வது நாளாக கஞ்சி குடிக்கும் போராட்டம் நடத்தினர்.
வடக்கன்குளம்:
நெல்லை மாவட்டம் வள்ளியூர் யூனியன் சிதம்பரபுரம் - யாக்கோபுரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட 1, 2-வது வார்டு பகுதியில் உள்ள சுமார் 100-க்கும் மேற்பட்ட வாக்காளர்களை கடந்த உள்ளாட்சி தேர்தலின்போது ஆவரைகுளம் மற்றும் பழவூர் பஞ்சாயத்துகளில் இணைத்துள்ளனர். இதற்கு எதிர்த்து தெரிவித்து அப்போது பொதுமக்கள் உள்ளாட்சி தேர்தலை புறக்கணித்தனர்.
இந்த நிலையில் பிரிக்கப்பட்ட வாக்காளர்கள் குடியிருக்கும் பகுதியில் தெருவிளக்கு, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளும், 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் வேலையும் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் தங்களை மீண்டும் சிதம்பரபுரம் - யாக்கோபுரம் பஞ்சாயத்தில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து பொதுமக்கள் கடந்த 15-ந்தேதி சிதம்பரபுரம் மெயின் ரோட்டில் முற்றுகையிட்டு போராட்டத்தை தொடங்கினர். 3-வது நாளான நேற்று கஞ்சி காய்ச்சி குடிக்கும் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து சிதம்பரபுரம் பஜாரில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன.
Related Tags :
Next Story