நெல் அறுவடை எந்திரம் மோதி பெண் குழந்தை பலி


நெல் அறுவடை எந்திரம் மோதி பெண் குழந்தை பலி
x
தினத்தந்தி 18 Feb 2022 2:27 AM IST (Updated: 18 Feb 2022 2:27 AM IST)
t-max-icont-min-icon

நெல் அறுவடை எந்திரம் மோதி பெண் குழந்தை உயிரிழந்தது.

வேப்பந்தட்டை:

பெண் குழந்தை
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள அ.மேட்டூரை சேர்ந்தவர் சத்தியசீலன். இவரது மகள் யாஷிகா(வயது 1). இந்த குழந்தை நேற்று வீட்டின் அருகே தெருவில் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக அதே ஊரை சேர்ந்த ஆனந்த் என்பவர் நெல் அறுவடை எந்திரத்தை ஓட்டி வந்தார்.எதிர்பாராதவிதமாக சாலையில் விளையாடிக் கொண்டிருந்த யாஷிகா மீது நெல் அறுவடை எந்திரம் மோதியது. இதில் படுகாயமடைந்த குழந்தையை அருகில் இருந்தவர்கள் உடனடியாக மீட்டு அரும்பாவூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர்.
சாவு
அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர், மேல்சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே குழந்தை யாஷிகா பரிதாபமாக உயிரிழந்தாள். இந்த சம்பவம் தொடர்பாக அரும்பாவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story