மோட்டார் சைக்கிளில் சென்றவர் பலி
கார் மோதி மோட்டார் சைக்கிளில் சென்றவர் பலியானார்.
மேலூர்,
மதுரை விரகனூர் மகாராஜாநகரை சேர்ந்தவர் முருகானந்தம் (வயது40). இவரது மனைவி திவ்யா (35). இவர்கள் 2 பேரும் சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் பெருமாள் கோவி லில் நடைபெற்ற தெப்பத்திருவிழாவில் சாமி கும்பிட்டுவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினர். மேலூர் வழியாக வந்த இவர்கள் நான்கு வழி சாலையை கடந்துள்ளனர். அப்போது திருச்சியில் இருந்து மதுரை நோக்கி வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் முருகானந்தம் அதே இடத்தில் இறந்து போனார். அவரது மனைவி திவ்யா படுகாயம் அடைந்து மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இந்த விபத்து குறித்து மேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருவள்ளூரை சேர்ந்த வேல்முருகன் (30) என்பவரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story