அனைத்து பள்ளிகளுக்கும் இன்றும், நாளையும் விடுமுறை.வேலூர் கலெக்டர் அறிவிப்பு
அனைத்து பள்ளிகளுக்கும் இன்றும், நாளையும் விடுமுறை விடப்பட்டுள்ளதாக வேலூர் கலெக்டர் தெரிவித்துள்ளார்.
வேலூர்
வேலூர் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான குமாரவேல்பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
வேலூர் மாவட்டத்தில் உள்ள வேலூர் மாநகராட்சி, குடியாத்தம், பேரணாம்பட்டு நகராட்சிகள், ஒடுகத்தூர், பென்னாத்தூர், பள்ளிகொண்டா, திருவலம் ஆகிய பேரூராட்சிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நாளை (சனிக்கிழமை) ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கும், தேர்தல் வாக்குச்சாவடி மையங்களாக செயல்படும் பள்ளிகளுக்கும் இன்று (வெள்ளிக்கிழமை) விடுமுறை அளிக்கப்படுகிறது.
தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் நாளை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் பகுதியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறையாகும். ஊரக உள்ளாட்சி பகுதிகளில் உள்ள பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணியில் ஈடுபடுகிறார்கள்.
ஒரு பள்ளியில் உள்ள 50 சதவீத ஆசிரியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டால் அந்த பள்ளிக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது. இன்று நடைபெறும் தேர்தல் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளும் ஆசிரியர்களுக்கு சிறப்பு அனுமதி அளிக் கப்படுகிறது. இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story